இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை
டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.
1. Google Chrome
இணைய உலகில் மிகப்பெரிய இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் உலவி. இதன் வளர்ச்சி மற்ற பிரவுசர்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. தற்பொழுது முதல் இடத்தில இருந்த IE உலவியை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை கைப்பற்றி உள்ளது குரோம் உலவி. ஏராளமான வசதிகள், நீட்சிகள், சிறந்த வேகம், சரியான வடிவமைப்பு போன்ற காரணங்களால் இந்த மென்பொருளை பெரும்பாலானவர்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Chrome for Linux
2. Firefox
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும். உலாவிகளின் கடும் போட்டியை சமாளிக்க மொசில்லா நிறுவனமும் அடிக்கடி உலவியை அப்டேட் செய்து வெளியிடுகின்றனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Firefox for Linux
3. PicPick
பதிவர்களுக்கு பெரும்பாலும் பயன்படும் மென்பொருள் இது. கணினி திரையை சுலபமாக ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது மட்டுமின்றி இந்த மென்பொருள் மூலம் ஸ்க்ரீன் ஷாட்களுக்களை அழகாக உருவாக்கலாம். அது மட்டுமின்றி Color Picker, Magnifier, white board போன்ற பல வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. மற்றொரு விஷயம் இந்த மென்பொருளை உபயோகிப்பது மிகவும் சுலபம். இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய PicPick for windows
4. Opera
மிக வேகமான இணைய உலவி என பெயர் பெற்றது ஒபேரா உலாவியாகும். பல எண்ணற்ற வசதிகளை இந்த உலவி கொண்டுள்ளது. இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை ஒபேரா நிறுவனத்தினர் வெளியிட்டு உள்ளனர்.
இதன் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - Opera for Linux
5. CCleaner
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளின் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - CCleaner for Windows
HACKER ன் பனிவான வேண்டுகோள். இந்த பக்கத்திலுள்ள Download Link ஐ click செய்தால். ஒரு விளம்பரம் தோன்றும், அதில் வலது பக்க மேல் மூலையில் SKIP AD என்பதை click செய்யவும் என்பதை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
Thanks to This Post Sasi Kumar
பதிலளிநீக்குthx my dear Friends
பதிலளிநீக்கு