பர்மா Muslimகளின் அவலங்களை சர்வதேசப்படுத்த உதவுங்கள் | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 பர்மா Muslimகளின் அவலங்களை சர்வதேசப்படுத்த உதவுங்கள்


அன்புள்ள உள்ளங்களுக்கு

கடந்த சில வாரங்களாக பர்மா  முஸ்லீம்களுக்கு  இழைக்கப்பட்டு    வரும்  அநீதிகளை பார்த்துக்கொண்டு  கண்ணீர்  வடித்துக்கொண்டு  சும்மா இருக்க முடியவில்லை .






இதே ஸ்தானத்தில்  இருபது   வருடங்களுக்கு முன் நாம் இருந்தோம் .சொந்த நாட்டில் சொகுசு வாழ்க்கையில் மூழ்கிக்கிடந்த  நம் முஸ்லீம் அமைச்சர்களே நம்மை திரும்பி பார்க்கவில்லை . நமது பிரச்சினையை சரியான  நேரத்தில் சர்வேதேசப்படுத்தவில்லை .வடக்கில் அகதிகள் அழுத குரலும் கிழக்கே முஸ்லீம்கள் வைத்த ஒப்பாறியும் நமது நாட்டுக்குள்ளேயே  தெற்கிலேயே கேட்டிருக்கவில்லை.  அதே அநீதிதான் இன்று  பர்மாவில் நடக்கிறது . கேட்பதற்கு  ஆளில்லை என்ற  துணிவில் ,ஜனநாயகம் போர்த்திவிட்ட பெருமையில்  அப்பாவி முஸ்லீம்கள் புத்த வெறியர்களாலும், பொலிசாராலும் ,இராணுவத்தினராலும்  தினம் தினம் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் .



இதை எந்த முஸ்லீம் நாடுகளும் அமைப்புகளும்  ,ஏன் நமது நாட்டு முஸ்லீம் அமைச்சர்களும்  கண்டு கொண்டதாக  தெரியவில்லை

பொறுத்தது போதும் . இனியும் பொறுக்க முடியாது



இதோ பர்மா முஸ்லீம்களை பாதுகாக்கும் படி ஐ நா செயலாளரை உடனடியாக  கேட்கும் மனு ஒன்றை ஆங்கில மொழியில் எமது இணையம் மூலமாக avaaz .org என்ற சர்வேதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் உருவாக்கியுள்ளோம் .அந்த மனுவில் பர்மா முஸ்லீம்கள் படும் அவஸ்தைகளையும் ,அல்லல்களையும் ,அநீதிளையும் சுருக்கமாக விவரித்துள்ளோம் . அந்த மனுவில் பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க ஐ நா உடனியாக தீர்மானம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உடனடியாக ஐ நா சமாதனப்படையை கண்காணிப்பில் ஈடுபடுத்த அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளோம் .



எனவே தயவு செய்து எமது இந்த முயற்சியை , பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த முயற்சியை வெற்றி பெற வைப்பது முதலில் அல்லாஹ்வின் புறத்திலும் அடுத்ததாக உங்களின் கைகளிலும் உள்ளது

எனவே இந்த கீழுள்ள லிங்கை அழுத்தி உங்களது பெயரை பதிந்து உங்களது ஆதரவை வெளிப்படுத்துங்கள் இந்த முயற்சிக்கு சுமார் ஆயிரம் கையொப்பங்களை  திரட்டவும் அதன் பின் ஒரு இலட்சத்துக்கு அதை கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளோம் . இந்த முயற்சிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குவதோடு இதுபற்றி உங்கள் நண்பர்கள் உறவினர்கள்  ,தெரிந்தொர்களுக்கு தெரியப்படுத்துங்கள் .

http://www.avaaz.org/en/petition/Protection_of_Muslims_in_Myanmar

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.