Hello Friends,
எனது வலைத்தளத்தில் நமது பதிவுகளை காப்பி அடிப்பவர்களுக்கு நாம் ஆப்பு அடிப்போம் வாருங்கள் என்ற ஒரு பதிவிற்கு asa asath என்பவர் தமிழில் pdf file உருவாக்குவது எவ்வாறு என என்னிடம் கேட்டுள்ளார். அவருடைய கேள்விக்கு பதிலாகவும் எமது வாசகர்களின் நன்மைக்காகவும் இந்த எவ்வாறு Online ல் உங்களுடைய Document களை pdf ஆக convert செய்வது என்ற பதிவை வெளியிடுகின்றேன்.
Online ல் கோப்புக்களை .pdf ஆக மாற்றித்தர நிறைய இணையத்தளங்கள் இருக்கின்றன. ஏன் எனது தளத்திலும் பதிவின் இறுதியில் இருக்கும் Convert Document to PDF என்ற Gadget ல் .pdf ஆக கோப்புக்களை மாற்றிக்கொள்ளலாம்.
அதற்கு முதலில் நீங்கள் pdf க்கு மாற்றப்போகும் கோப்பை Choose File என்பதை click செய்வதன் மூலம் தெரிவுசெய்து, உங்களுக்கு மின்னஞ்சலில் தேவையென்றால்,மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.
இல்லை நேரடியாக பதிவிறக்கி கொள்ள வேண்டும் என்றால் மின்னஞ்சல் முகவரியை கொடுக்காது Convert and Send என்பதை click செய்யவும். பின் தேன்றுவதில் Download செய்ய Download யையும், மின்னஞ்சலுக்கு அனுப்ப Send என்பதையும் click செய்யவும்.
ஆனால் இதில் தமிழில் உள்ள கோப்புக்களை, தமிழ் மொழியில் .pdf ஆக மாற்ற முடியாது . அதற்கு
இங்கே click செய்து PDF Creator என்ற மென்பொருளை பதிவிறக்கி உங்களுடைய கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு PDF Creator ஐ திறந்து உங்களுடைய கோப்பை தேர்ந்தெடுக்கவும்.
பின் கோப்பை தேர்ந்தெடுத்தவுடன் கீழே உள்ளது போல் திறக்கும், அதில் உங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து விட்டு Save என்பதை கொடுக்கவும்.
பின் உங்களுடைய Pdf ஐ சேமிக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து Save என்பதை கொடுக்கவும் அவ்வளவுதான்.
Convert Document to PDF Gadget ஐ உங்களுடய தளங்களிலும் காட்சிப்படுத்த கீழேயுள்ள code ஐ Copy செய்து உங்களுடைய Dashboard யின் Layout யில் Add a Gadget யில் HTML/Java Script ஐ தெரிவுசெய்து Paste செய்யவும்.
<script src="//www.gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/100505735221491385701/Document-to-PDF.xml&synd=open&w=300&h=250&title=Convert+Document+to+PDF&border=%23ffffff%7C0px%2C1px+solid+%23004488%7C0px%2C1px+solid+%23005599%7C0px%2C1px+solid+%230077BB%7C0px%2C1px+solid+%230088CC&output=js"></script><a href="http://hacking4200.blogspot.com"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOb33V7F14r5VTpk7hqvUN8cziojS5yA5vtjBGCWs85bmiy82fZ8S6NGmJ7KezvWMNt4Zgavyv-ECoBgFUZMZaaFfCKxtXHLuw9X62MqkamHvVgEqkwoxChIQUu1nyJUUs5ONI9EnLeo9S/s1600/Logo.png" border="0" /></a>
இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டை ஏதாவது ஒரு சின்னத்தில் குத்துங்கள்.
நன்றி நண்பா என்னுடைய கேள்விகாக பதிவு எழுதியதற்கு மிகவும் நன்றி pdf fileயில் முகப்பு போட்டோ குடுக்க முடியுமா
பதிலளிநீக்கு