உங்கள் Blog ல் Malware உள்ளதா | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 உங்கள் Blog ல் Malware உள்ளதா


மால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் "தீம்பொருள்" என்று அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.


மால்வேர் எப்படி தாக்குகிறது?

மால்வேர் நிரல்களை அல்லது மால்வேரினால் பாதிக்கப்பட்ட தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட நிரல்களை நமது ப்ளாக்கில் நிறுவுவதால் நம்முடைய ப்ளாக்கிற்கும் மால்வேர் வந்துவிடும். இதனால் சில சமயம் நம் ப்ளாக்கை பார்க்கும் அனைவரின் கணினியிலும் வந்துவிடும். சில சமயம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் சில மால்வேர்களினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் நமது ப்ளாக்கை திறந்தால் அது வேறொரு விளம்பர தளத்திற்கு redirect ஆகும். இது மாதிரியான மால்வேர்களுக்கு ஆட்வேர் (Adware) என்று பெயர். சமீபத்தில் ஒரு தமிழ் திரட்டியின் ஓட்டுபட்டையில் இந்த பிரச்சனை வந்தது. பிறகு சரிசெய்யப்பட்டுவிட்டது.

நமது ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?

இதனை கண்டுபிடிக்க கூகிள் தளம் நமக்கு உதவுகிறது. கூகிள் தேடலில் உங்கள் ப்ளாக் முகவரியைத் தேடி பாருங்கள். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் தேடல் முடிவுகளில் உங்கள் ப்ளாக் பெயருக்கு கீழே “This site may harm your computer” என்று சொல்லும்.

அந்த மால்வேர் பற்றிய மேலும் சில தகவல்களை அறிய,

http://www.google.com/safebrowsing/diagnostic?site=blogname.com 

என்ற முகவரிக்கு செல்லவும். இதில் blogname.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். இதுவும் கூகிள் தரும் வசதிதான். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் "Site is listed as suspicious - visiting this web site may harm your computer." என்று சொல்லும். மேலும்  எந்த தளத்தின் மால்வேர் உங்கள் ப்ளாக்கை தாக்கியுள்ளது? என்றும் காட்டும்.

உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இல்லையென்றால் 'Google has not visited this site within the past 90 days' என்று சொல்லும்.

மால்வேர் நிரலை எப்படி கண்டுபிடித்து நீக்குவது?

மால்வேர் பாதித்துள்ள ப்ளாக்கை சரி செய்வதற்கு எளிய வழி டெம்ப்ளேட் மாற்றுவது. அப்படியில்லாமல் மால்வேர் நிரலை மட்டும் நீக்க வேண்டும் என நினைத்தால் இதற்கு கூகிள் வெப்மாஸ்டர் டூல் உதவுகிறது. இது வரை நீங்கள் உங்கள் தளத்தை அதில் இணைக்கவில்லைஎனில் உடனே இணைத்து விடுங்கள்.

அதில் இணைத்தபிறகு உங்கள் ப்ளாக்கில் மால்வேர் வந்தால் கூகிள் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் பின்வருமாறு காட்டும்.


அதில் Details என்பதை க்ளிக் செய்தால் மால்வேர் உள்ள நிரலை காட்டும்.


பிறகு Blogger Dashboard => Template => Edit Html பகுதிக்கு சென்று, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்து, பாதிக்கப்பட்டுள்ள நிரலை நீக்கிவிட்டு, Save Template என்பதை க்ளிக் செய்யவும்.


இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான ஓட்டையும், பதிவு பற்றிய கருத்தையும் தெரிவியுங்கள்

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.