License Crawler. | HACKING ALL PRODUCT.
Recommend on Google

0 License Crawler.

உங்கள் கணணியில் பல்வேறான மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்களும் அடங்கும்.

கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருட்களுக்கு(Licensed softwares) வைத்திருப்பீர்கள். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் cd பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும் அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்கள் அனுப்பப்படும்.

நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள். வைரஸ் காரணமாக கணணி செயலிழக்கும் போதோ அல்லது கணணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட்(Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும்.

அப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண்(Serial No) எங்கே என்று தெரியாமல் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler.

இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம் அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தெரிவு செய்து கொள்ளவும்.

பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொருள்களின் லைசென்ஸ்களும் கிடைத்துவிடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளலாம்.

எளிமையான இந்த மென்பொருள் கணணியில் நிறுவாமலே பயன்படுத்தலாம், பென்டிரைவில் வைத்தும் பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை பதிவிறக்க கீழே சொடுக்கவும்.



Password.    zxcvbnm


Please Write your comment.

கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சலை Type செய்து பதிவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பதிவிலுள்ள குறைகளையும், இந்த தளம் பற்றிய கருத்துக்களையும் குறிப்பிடுக.

Hello Friends இப்போது என்னிடம் தமிழில் 4 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது எது என்பதை தெரிந்து வாக்களிக்கவும்.